அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர் !!

ஏப்ரலில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக சினிமா நட்சத்திரங்கள், பரப்புரையாளர்களாக களமிறங்க உள்ளனர். பிற அணிகளை திக்குமுக்காடாச் செய்யும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புது டீமை பிரச்சார களத்தில் இறக்கவுள்ளார்.

வன்னியர் உள் இடஒதுக்கீடு, விவசாய கடன் தள்ளுபடி, இலவச வாஷிங்க் மெஷின் உள்ளிட்ட திட்டங்களும், அரியர் மாணவர்களுக்கு பாஸ் என்ற செய்தியையும் அறிவித்துள்ளதால்,பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாளை அதிமுக கட்சியின் பிரச்சாரத்திற்காக சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் உள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிமுக-பாமக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளதால், இரட்டை இலை கட்சியின் சார்பாக போண்டா மணி, சரவணன், மனோபாலா, அனுமோகன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்,குண்டு கல்யாணம், வையாபுரி, சிங்கமுத்து, வெண்ணிற ஆடை நிர்மலா, குண்டு கல்யாணம், அஜய்ரத்தினம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் நாளை தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர்.

அம்மா ஆட்சி காலம் முதல் முதல்வர் எடப்பாடியின் ஆட்சிக்காலம் வரை சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர், அதிமுக-வுக்கு பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் பிற கட்சிகளிடம் இந்த அளவிற்கு சினிமா பிரபலங்களின் சப்போர்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here