கான்ஜுரிங் கண்ணப்பன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் கதை

1930 வருடம் ஒரு சூனியக்காரி ட்ரீம் கேட்சர் ஒன்றில், ஒரு சூனிய பொம்மையை வைத்து ஏதோ செய்கிறாள், அப்போது அவளை யாரோ சுட்டு கொன்றுவிடுகின்றனர். 2023 வருடம் கதையின் நாயகன் கண்ணப்பன் ஒரு கேம் டெவலப்பர் ஆக இருக்கிறார், இவர் வேலை தேடுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் வேலை சம்மந்தமாக வெளியே செல்வதற்கு குளிக்க தண்ணீர் இல்லாமல் பல வருடங்களாக மூடி கிடந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது. அந்த ட்ரீம் கேட்சர் அவருக்கு கிடைக்கிறது, கண்ணப்பன் தெரியாமல் அதில் உள்ள ஒரு இறக்கையை பித்துவிடுகிறார். அதை அப்போதே கிணற்றில் போட்டும், எப்படியோ கண்ணப்பன் வீட்டிற்குள் வந்துவிடுகிறது.

Read Also: Kattil Tamil Movie Review

அன்றிரவு கண்ணப்பன் தூங்கும்போது கனவு உலகத்தில் ஒரு பேலஸில் இருக்கிறார், அங்கு பேயும் இருக்கிறது, தான் அந்த ட்ரீம் கேட்சர் இல் உள்ள இறக்கையை பித்ததால்தான் இந்த பிரச்சனை என்று தெரிந்துகொள்கிறார், அதன்பிறகு அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ட்ரீம் கேட்சர் இல் உள்ள இறக்கைகளை பித்துவிடுகின்றனர், அவர்களும் அந்த கனவு உலகத்தில் உள்ள பேலஸில், மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ட்ரீம் கீ வேண்டும். அதனை கண்டுபிடித்து இவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்களம்
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சில காமெடிகள்
➡சிறப்பு சப்தங்கள் ( SFX )
➡சிறப்பான முதல்பாதி

படத்தில் கடுப்பானவை

➡ஒருசில காமெடி கவுண்டர்கள்
➡படத்தின் வேகத்தை குறைக்கும் இரண்டாம்பாதியில் வரும் ஒருசில காட்சிகள்

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *