கட்டில் தமிழ் திரைப்பட விமர்சனம்

கட்டில் கதை

இந்த கதையினை கனேஷ் மகன் சுரேஷ் தான் நமக்கு சொல்கிறார், இவர்களின் குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர், கனேஷ்- ன் தாத்தா பர்மாவுக்கு சென்று உழைத்து அங்கிருந்து கப்பல் மூலம் பர்மா தேக்குகளை வாங்கிவந்து மிகப்பெரிய வீடு கட்டி இருப்பார், அது மட்டுமல்லாமல் ஒரு கட்டிலையும் செய்திருப்பார். கணேஷ்-கு அந்த கட்டில் மிகவும் பிடிக்கும்.

அந்த கட்டிலில் தான், அவர்களின் அடுத்த தலைமுறையினர் பிறக்கின்றனர், தற்போது அந்த கட்டில் 250 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, கணேஷ்-ன் அண்ணன், அக்காக்கள் அந்த வீட்டை விற்க முடிவெடுக்கின்றனர், ஆனால் கணேஷ் தனக்கு அந்த கட்டில் வேண்டும் என போராடுகிறான், ஆனால் அந்த கட்டில் வைக்கும்படியான பெரிய வீடு கிடைக்கவில்லை, இதற்கிடையில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறான், கடைசியில் வேறு பெரிய வீடு கிடைத்து அந்த கட்டிலை தன் அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்தினரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை எடிட்டர் லெனின் எழுத அறிமுக இயக்குனர் EV. கணேசன் நடித்து இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡கோயிலிலே பாடல்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡சுவாரஸ்யமற்ற திரைக்கதை
➡சில பாடல்கள்

Rating: ( 2/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *