டீமன் தமிழ் திரைப்பட விமர்சனம்

டீமன் கதை

கதையின் நாயகன் விக்னேஷ் சிவன் சினிமாவில் இயக்குனராவதற்காக போராடிகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார், அவரிடம் ஒரு பேய் கதையை சொல்லி, படமும் ஓகே ஆகி விடுகிறது. அப்போது அவர் தங்குவதற்காக வீடு பார்த்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தபடியே ஒரு அபார்ட்மெண்டில் வீடு கிடைக்கிறது.

Read Also: Aima Tamil Movie Review

அந்த வீட்டில் நாயகன் தூங்கும்போதெல்லாம் இவர் இறப்பது போன்ற கனவு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விக்னேஷ், தொடர்ந்து வரும் இந்த கனவுகளுக்கு காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள, இந்த வீட்டில் இதற்கு முன் என்ன நடந்து என்று தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். அதன் பிறகு இவருக்கு என்ன ஆயிற்று என்பதும், கனவிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இது டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட உண்மை சமத்துவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதையாகும்.

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாநாயகனின் எதார்த்த நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ஃப்ளாஷ் பேக் காட்சி

படத்தில் கடுப்பானவை

➡முதல் பாதியில் வரும் கனவு காட்சிகள்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *