டிமான்ட்டி காலனி 2 கதை
2015 ல் வெளியான டிமான்ட்டி காலனி படத்தை எங்கு முடித்தார்களோ, அங்கிருந்தே இந்த டிமான்ட்டி காலனி 2 படத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
கதையின் ஆரம்பத்தில் சாம் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறார், அவருடன் அவரின் நண்பர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர், சாம் இன் மனைவியான டெபி க்கு தன் கணவரின் தற்கொலைக்கு பின்னால் ஏதோ மர்மம் இருப்பதை உணர்கிறார்.
Read Also: Thangalaan Tamil Movie Review
டெபி தன் கணவரின் இறப்பிற்கு பின்னல் இருக்கும் மர்மத்தை தேடி போகும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் தெரியவருகிறது. கடைசியில் முதல் பாகத்தில் இறந்துபோன சீனிவாசனுக்கு, இந்த பாகத்தின் நாயகனான ரகுவுக்கும், டெபிக்கும் என்ன சம்மந்தம் என்பதும் சாம் இன் இறப்பிற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அஜய் ஞானமுத்து மிகவும் சிறப்பாக இயக்குள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡பிரியா பவானியின் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
➡திரைக்கதை
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படத்தை உருவாக்கிய விதம்
➡CG காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡ஒரே இடத்தில் நடக்கும் இரண்டாம்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3.5 / 5)