நடிகர் மைக் மோகனை பற்றிய இந்த 12 சுவாரசியமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

1. மோகன், தமிழில் நடித்த முதல் மூன்று படங்களுமே ( மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள்) சூப்பர் ஹிட்டானவை. இந்த அதிர்ஷ்டவாய்ப்பு, தமிழில் இதுவரை எந்த நடிகருக்கும் வாய்த்ததே இல்லை.

2. இளையராஜாவின் 100 வது படமான மூடுபனி, 300 வது படமான உதயகீதம் இரண்டுமே மோகன் நடித்த படங்களாகும். இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு இசையமைப்பாளருக்கு, ரசிகர்கள் கட்அவுட் வைத்த பெருமைக்குரிய முதல் படமான பயணங்கள் முடிவதில்லை படமும் மோகன் படம் தான். அந்த இசையமைப்பாளர் இளையராஜா தான்.

3.ஒரே ஆண்டில் அதிகபடங்களில் நடித்த சாதனையைப் புரிந்துள்ள மிகச்சில தமிழ் நாயக நடிகர்களுள் மோகனும் ஒருவர்.

4. மிக பிரபலமான கதாநாயகனாக விளங்கியபோதே, கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவமளிக்கும் வகையிலான கதைகொண்ட படங்களிலும் அதிகளவில் நடித்து, வெற்றியும், புகழும் தேடிக்கொண்ட நடிகர்களுள் மோகனும் ஒருவர்.

5. மோகன், தன் சொந்தக்குரலில் பேசி நடித்த முதல் தமிழ்ப்படம்” பாசப்பறவைகள்”.

6. மோகனை, கோகிலா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாலுமகேந்திரா. ஆனால் அவருடைய இயக்கத்தில், முழுநீள கதாநாயகனாக, மோகன் ஒரே ஒருபடத்தில் மட்டுமே நடித்துள்ளார். அப்படம், “ரெட்டைவால் குருவி”.

7.கால்ஷீட் விஷயத்தில் குளறுபடி செய்யாதவர் மோகன் என்ற நற்பெயரும் உண்டு.

8. இவர் ஒரு படத்தில் நடித்தாலே, அப்படம் மினிமம் வசூல் கியாரண்டி என்ற நிலை நிலவியதால், இவர், முழுபடத்தில் நடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை; கௌரவ வேடத்திலாவது தம் படங்களில் நடித்தால் போதுமென தயாரிப்பாளர்கள் விரும்பினர். மோகனும், அதற்கேற்ப, கௌரவ வேடங்களிலும் சில படங்கள் நடித்துக் கொடுத்தார்.

9. மோகன் நடித்த ஒரு தமிழ் படத்தில், பின்னணி பாடலொன்றை, கமல் பாடியுள்ளார் என்ற விவரம், பலரும் அறியாதது. “ஓ மானே! மானே!” என்ற படத்தில் இடம் பெற்ற “பொன்மானை தேடுதே!” என்ற பாடலை, கமல் பாடியுள்ளார்.

10. திரையுலக மறுபிரவேசத்திலும், கதாநாயகனாகவே நடிக்க விரும்பிய மோகன், தன்னைத்தேடிவந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்.

11. “அன்புள்ள காதலுக்கு” என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் சொந்தமாக இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மோகன்.

12. மோகனை தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து சாதனை படைத்த தமிழ் நடிகர் எனலாம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் Once Upon A Time In Madras (ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்)..!
அடுத்த கட்டுரைதென்னிந்திய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்