தினசரி கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் சக்திக்கு பெண் பார்க்க குடும்பமாக செல்கிறார்கள், போன வேகத்திலேயே பெண்ணை பார்த்துவிட்டு திரும்புகிறார்கள். சக்திக்கு தான் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதிலும் குறிப்பாக திருமணம் செய்துகொள்ள போகும் பெண் தன்னை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார், இருவரும் சேர்ந்து சம்பாதித்தால் சீக்கிரம் தான் நினைத்த வாழ்க்கையை வாழலாம் என நினைக்கிறார்.
Read Also: Kanneera Tamil Movie Review
சக்திக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றால், 7 வருடங்களுக்கு திருமணம் ஆகாது என ஜோசியர் சொல்லியிருப்பார் , இதனால் திருமணத்தை உடனடியாக நடத்தவேண்டும் என்பதனால், சக்தியின் அம்மாவும், அக்காவும் சேர்ந்து திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்ன கதையின் நாயகி ஷிவானியை திருமணம் செய்துவைக்கிறார்கள், இதற்கடுத்து சக்திக்கும், ஷிவானிக்கும் இடையில் என்னவெல்லாம் நடந்தது என்பதும், சக்தி தான் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.