இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! !

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் “நந்தா பெரியசாமி” இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது.

கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் தந்து முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாயகி அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை அனன்யா நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சினேகன், இயக்குநர் ராஜூமுருகன், மற்றும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல்களை எழுதுகின்றனர். மைனா படப்புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’ முன்னோட்டம் வெளியீடு
அடுத்த கட்டுரைபுது தில்லியில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்