டங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

டங்கி கதை

லண்டனில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் கதையின் நாயகி மனு அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து தன்னுடைய வழக்குரைஞரை சந்தித்து தானும், தன்னுடைய நண்பர்களும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய சொல்கிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த சிக்கலை தீர்க்க தற்போது இந்தியாவில் இருக்கும் தன் முன்னாள் காதலனான ஹார்டியை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார்.

Read Also: Salaar: Part 1 Tamil Movie Review

மனு அவரின் நண்பர்களுடன் எதற்காக லண்டன் வந்தார்கள். லண்டனில் இவர்களுக்கு என்ன ஆயிற்று, எதனால் இவர்கள் இந்தியாவிற்கு திரும்ப நினைக்கிறார்கள். அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதும் கடைசியில் இவர்கள் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு பத்திரமாக திரும்பினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி அவருக்கே உண்டான பாணியில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஷாருக்கான், டாப்ஸி, விக்கி- யின் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த மற்ற அனைவரின் நடிப்பு
➡கதைக்கரு
➡பாடல்& பின்னணி இசை
➡டங்கி பற்றிய விவரம்
➡கண்ணீர் வரவைக்கும் காட்சிகள்
➡கிளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *