சலார்: பகுதி 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

சலார் கதை

1985 ல்- கதையின் நாயகன் தேவா, தன்னுடைய நண்பன் வரதராஜனுக்காக ஒருவரை எதிர்கிறான். மற்றும் சில காரணத்திற்காக தேவா அந்த இடத்தை விட்டு செல்கிறான். 2017 ல் கதையின் நாயகி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகிறார், அவர் வருகிறார் என தெரிந்ததும் ரமா மன்னார்-ன் கூட்டம் அவரை பிடிக்க துடிக்கிறார்கள். காரணம் நாயகியின் அப்பா 7 வருடங்களுக்கு முன் செய்த ஏதோ விஷயத்திற்கு பழிவாங்க துடிக்கிறார்கள்.

Read Also: Saba Nayagan Tamil Movie Review

நாயகியின் அப்பா கிருஷ்ணகாந்த் தன் மகளை காப்பாற்ற பிலால் இடம் உதவி கேட்கிறார், நாயகி வாரணாசி ஏர்போட்டில் வந்து இறங்கியதும் அவரை பிடித்துவிடுகின்றனர். பிலால் நாயகியை காப்பாற்றி அஸ்ஸாம்-இல் கொண்டுபோய் தேவாவின் பொறுப்பில் பார்த்துக்கொள்ளுமாறு விட்டுவிடுகிறார். காரணம் ரமாவின் ஆட்களிடமிருந்து நாயகியை காப்பாற்ற தேவாவால் மட்டுமே முடியும் என்பதனால் கடைசியில் நாயகிக்கு என்ன ஆயிற்று என்பதும், தேவா இத்தனை வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும், 7 வருடத்திற்கு முன் நடந்த அந்த சம்பவம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் நீல் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡பிரபாஸ்& ப்ரித்விராஜ்- ன் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் நீளம்
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Rating ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *