EMI கதை
கிருஷ்ணகிரியில் கதையின் நாயகன் சிவா கம்பெனியில் வேலை செய்கிறான். அதே கம்பெனியில் தான் விரும்பிய பெண்ணான கதையின் நாயகி ரோஸியும் வேலைக்கு சேர்கிறார். சிவா தன் காதலை பலமுறை வெளிப்படுத்தியும், ரோஸி அதனை ஏற்க மறுக்கிறார். அதனால் சிவா தன் நண்பர்களிடம் உதவி கேட்க, அவர்களோ புது வண்டி வாங்க சொல்கிறார்கள்.
Read Also: L2: Empuraan Tamil Movie Review
சிவா EMI ல் புது வண்டியும் வாங்குகிறார். சில நாட்களுக்கு பிறகு ரோஸியும் காதலை ஏற்றுக்கொள்கிறார்.இவர்கள் காதல் விஷயம் வீட்டிற்கு தெரியவர, ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தன் மனைவிக்கு திருமண பரிசாக கார் ஒன்றை EMI ல் வாங்கி பரிசளிக்கிறார். ஒருசில நாட்களுக்கு பிறகு வேலையும் போக, EMI ஆள் பிரச்சனையும் உண்டாகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சதாசிவம் நடித்து இயக்கியுள்ளார்.