Family படம் கதை
கதையின்நாயகன் தமிழ் தன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறான். தீபாவளி அன்று மொத்த குடும்பத்தையும் காவல் துறையினர் கைது செய்கின்றனர். காரணம் யமுனா என்ற பெண்ணிடம் குடும்பமாக சேர்ந்து ஏமாற்றியதாக புகார் வந்திருக்கும்.
Read Also: Pushpa 2-The Rule Tamil Movie Review
கதையின் நாயகன் தமிழுக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இவர் ஒருசில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருப்பார். ஒரு தயாரிப்பாளர் இவரை ஏமாற்றிவிட, கடைசியில் நாயகனின் குடும்பம் படம் எடுக்க உதவ நினைக்கிறார்கள். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் செல்வகுமார் திருமாறன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡உதய் கார்த்திக் & விவேக் பிரசன்னா நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனம்
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி கதைக்களம்
ரேட்டிங்: ( 3 .25 / 5 )