J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது

பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் பெண்களும், இத்திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்து பாராட்டினார்கள். முக்கியமாக இத்திரைப்படம் இந்த சமுதாயத்திற்கு, அதிலும் பெண்களுக்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது என்று மனப்பூர்வமாக கூறினார்கள்.

அதற்கும் ஒருபடி மேலே, இத்திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பாதிப்பால், ஒரு பெண் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இது திரைப்படம் என்பதையும் மறந்து, கதாநாயகன் பாலாஜி முருகதாசின் சட்டையைப் பிடித்து, கோபத்தின் உச்சிக்கு சென்று தாறுமாறாக பேசி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

படத்தை ரசித்து பாராட்டிய நடிகை ஷகிலா, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, இது திரைப்படம் என்பதை நினைவூட்டியும், அந்த பெண் அடங்கவில்லை, பின்னர் படக்குழுவினர் தலையிட்டு அந்த பெண்ணின் உண்மையான உணர்வை மதித்து, பாராட்டி அனுப்பி வைத்தனர்.

திரைப்படத்தைக் கண்டு களித்த அத்தனை பெண்களும், படத்தைப்பற்றி சிலாகித்து பேசியது இந்த திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் உணர்வுப்பூர்வமாக பேசியது, இத்திரைப்படத்திற்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது.

இத்திரைப்படம் புலனாய்வு கலந்த திகில் (INVESTIGATION THIRLLER) திரைப்படமாக ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்ப்பார்ப்புடன் அமைந்திருப்பதாக அனைவரும் பாராட்டினார்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.
அடுத்த கட்டுரைநயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் விமர்சனம்