சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’

துடிப்புமிக்க இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஹார்ட்டின்’.

‘மகான்’, ‘பேட்ட’, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு ‘ஹார்ட்டின்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

இந்த திரைப்படத்திற்கு ‘சுழல்’ இணையத் தொடர் மற்றும் ‘கொலைகாரன்’ புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்டு’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பை ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ புகழ் பரத் விக்ரமன் கையாள, கலை இயக்கத்தை ஜி துரைராஜ் (‘கருடன்’, ‘அயோத்தி’ புகழ்) மேற்கொண்டுள்ளார். ‘விடுதலை 2’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்த உத்தரா மேனன் ‘ஹார்ட்டின்’ படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

திறமைமிக்க கலைஞர்களின் பங்களிப்போடு டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிப்பில் உருவாகி வரும் ‘ஹார்ட்டின்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஒத்த ஓட்டு முத்தையா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைE5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.