தயாரிப்பாளர்கள் தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் தரப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் நாயகன் “I Am Unpredictable” என சொல்வதுபோல் நம்மால் கணிக்கமுடியாத கதைக்களமாக உள்ளது, சண்டைக்காட்சிகள் தரமானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. காட்சிகள் அனைத்தும் மிக பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உள்ளது.
கதையின் நாயகனாக குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிக்க, கதையின் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலியும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,”
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், தமனின் துள்ளல் இசையில் உருவாகியுள்ள இந்த கேம் சேஞ்சர்’ திரைப்படம் 10 – 01 -2025 ல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்பை எகிறவைக்கிறது.
இந்த கேம் சேஞ்சர்’ டீசர் உங்களுக்கு எந்த அளவு பிடித்திருந்தது என்பதை கமெண்ட் செய்யவும்.