கமல்ஹாசன் கட்சி குறித்து கௌதமி கருத்து ?

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக நான் பாஜகவை கவனித்து வருகிறேன் என்றும் இந்த கட்சி எனக்கு பிடித்ததால் அதில் இணைந்து உள்ளேன் என்றும் பாஜகவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கவுதமி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து கூறிய போது ’ஒவ்வொருவரும் புதிய கட்சியைத் தொடங்கும் போது மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான். அதே மார்க்கெட்டிங் தந்திரத்தை தான் மக்கள் நீதி மய்யமும் கடைபிடித்து வருகிறது. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி குறித்து மே 2ஆம் தேதிக்கு பிறகு தான் தெரியவரும் என்று அவர் கூறினார். கவுதமியின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here