குருமூர்த்தி கதை
கதையின் நாயகன் குருமூர்த்தி (நட்டி) சில காரணங்களால் பணி மாற்றம் செய்யப்பட்டு ஊட்டிக்கு வருகிறார். ராம்கி ஒரு பெரிய தொழிலதிபர் .அவர் ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை மூன்றுபேர் கொண்ட திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.
ராம்கி போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீசும் தேடுகிறது. பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் அந்த பணப்பெட்டியை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை
இதனை இயக்குனர் தனசேகர் இயக்கியுள்ளார்
Read Also: Witness Movie Review
படத்தில் சிறப்பானவை
நட்டியின் நடிப்பு
மொட்டை ராஜேந்திரனின் காமெடி
பின்னனி இசை
படத்தில் கடுப்பானவை
சுவரசியமற்ற திரைக்கதை
தனித்தனியே எடுத்து ஒட்டப்பட்ட காட்சிகள்
Rating: ( 2/5 )