இந்தியன் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

இந்தியன் 2 கதை

இந்தியா முழுவதும் ஊழல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது, இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர், சிலர் இறந்துபோகின்றனர். இந்த சம்பவங்களை சித்ரா அரவிந்தன் நண்பர்களுடன் இணைந்து, வீடியோவாக எடுத்து இவர்களின் யூடியூப் சேனலான Barking Dogs சேனலில் வெளியிடுகின்றனர். இவர்களின் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

படித்து தேர்ச்சி பெற்ற பிறகும், ஆசிரியர் வேலைக்கு லஞ்சம் கேட்டதால் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கிறார், இதனை நேரில் கண்ட அர்விந்த் அதற்காக போராடுகிறார், ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதால் COME BACK INDIAN என்ற #டேக் ஆரம்பித்து ட்ரெண்டிங் செய்கிறார், இதனை அறிந்த இந்தியன் தாத்தா, இந்தியா வருவதாக சொல்கிறார், அப்படி தாத்தா இந்தியா வந்த பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡மூன்றாம் பாகத்திற்கான சில காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
➡படத்தின் நீளம்

ரேட்டிங்: (2.75 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!
அடுத்த கட்டுரைடீன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்