இறைவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

இறைவன் கதை

2022: காவல் அதிகாரியான நரேன் தனது மனைவி, குழந்தை, தங்கை மற்றும் நண்பன் ஜெயம் ரவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார், நயன்தாராவிற்கு ஜெயம்ரவி மேல் காதல் இருக்கிறது, ஆனால் ஜெயம்ரவி அதற்கு பிடிகொடுக்கமால் இருக்கிறார். திடீரென்று ஒரு சைக்கோ கொலைகாரன் அவதரிக்கிறான் அவன் இளம் பெண்களை குறிவைத்து கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான், அந்த கேஸை முடிக்கும்போது நரேன் இறந்துவிடுகிறார்.

Read Also: Chithha Movie Review

நண்பனின் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைத்த ஜெயம்ரவி தனது போலிஸ் வேலையிலிருந்து விலகிவிடுகிறார், பிறகு நண்பன் குடும்பத்துடன் வாழ்கிறார். திடீரென்று அந்த சைக்கோ கொலைகாரன் பிரம்மா தப்பித்துவிடுகிறான். இதற்கடுத்து அந்த கொலைகாரன் என்ன செய்தான் என்பதும் அதற்கு ஜெயம்ரவி என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் I. அஹமத் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஜெயம்ரவி-யின் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡யுவனின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡எதிர்பாராத காமெடி

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡பாடல்கள்
➡கணிக்கும்படியான சில காட்சிகள்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *