சந்திரமுகி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சந்திரமுகி 2 கதை

தொழிலதிபரான, ரங்கநாயகி குடும்பத்தில் தொடர்ந்து பல கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது, தொழில்ரீதியாகவும் சில விஷயங்கள் நடக்கிறது. ரங்கநாயகி இதற்கு தீர்வு வேண்டி ஒரு குருஜியை சந்திக்கிறார். அப்போது அவர் அனைத்திற்கும் ஒரே தீர்வுதான், நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று உங்கள் குலசாமிக்கு தீபம் ஏற்றி அதற்கான பரிகாரங்களை செய்து துர்காஷ்டமி அன்று வழிபட வேண்டும். என்று குருஜி சொல்கிறார்.

Read Also: Iraivan Movie Review

ரங்கநாயகி தன் குடும்பத்துடன் குலசாமி கோவிலுக்கு சென்று பார்த்தால், அங்கு கோவில் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. அப்போது அவர்கள் அங்கு உள்ள வேட்டையன் அரண்மனையில் தங்குகின்றனர். அந்த அரண்மனையை முருகேசன் பார்த்துக்கொண்டிருக்கிறார், அந்த அரண்மனையில் இவர்கள் தங்க ஆரம்பித்த பிறகு சில அமானுஷியமான விஷயங்கள் நடக்கிறது. வேறு பிரச்சனைக்காக இங்கு வந்தால். இங்கு மேலும் பிரச்சனை தொடங்குகிறது. இந்நிலையில் இவர்களின் மொத்த பிரச்சனையையும் தீர்ந்ததா? இல்லையா? என்பதும், இவர்களின் இந்த பிரச்சனைக்கும் சந்திரமுகி, வேட்டையனுக்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பி.வாசு சந்தமுகி முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ராகவா & கங்கனாவின் சிறப்பான நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡MM. கீரவாணியின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡கிராஃபிக்ஸ்
➡மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *