கள்வா ஜூன் 22ம் தேதி ரிலீஸ்

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது.

திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதையான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இது திரில்லர் படமென்றாலும் ஆழமான காதலும் இருக்கிறது. ஜூன் 22ம் தேதி படம் வெளியாகும்போது, இது ரசிகர்களை நிச்சயம் கவரும்’ என்றார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
அடுத்த கட்டுரை‘கட்டானா’ திரைப்படம் : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!