ஏப்ரல் 4 அன்று ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு
தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பிவி ஷங்கர்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – என்.கே. ராகுல்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
கதை – ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்
திரைக்கதை – பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்
வசனங்கள் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்
கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்
நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் – சுபியர்
ஒப்பனை – வினோத் சுகுமாரன்
PRO – சுரேஷ் சந்திரா
விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!