கள்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கள்வன் கதை

ஒரு கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. யானைகள் அடிக்கடி ஒருசிலரை கொன்றுவிடுகிறது, இந்த பிரச்சனையை தீர்க்க வனத்துறையினர் சில திட்டம் போடுகின்றனர். கதையின் நாயகனும், அவரின் நண்பனும் இணைந்து கிராமத்திலுள்ள வீடுகளில் திருடுகின்றனர். காரணம் இவர்களுக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை. அப்படி ஒருநாள் ஒரு வீட்டினுள் திருடும்போது கதையின் நாயகியை பார்க்கிறார், காதல் வயப்படுகிறார்.

நர்சிங் படித்துக்கொண்டிருக்கும் நாயகி, ஓர் முதியோர் இல்லத்தில் உதவி செய்துவருகிறார். அங்கு உள்ள ஒரு முதியவரை அன்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை பார்த்த நாயகன், நாயகியை கவருவதற்காக அந்த முதியவரை தத்தெடுக்கிறார். கடைசியில் நாயகன் நாயகியை கவர்ந்தாரா? இல்லையா? என்பதும் அந்த முதியவர் யார் என்பதும்? நாயகன் முதியவரை தத்தெடுத்ததற்கான உண்மையான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை

இந்த கதையினை ஒளிப்பதிவாளர் P V. சங்கர் இயக்கி, இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡பாரதிராஜா & GV. பிரகாஷ் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡படம் உருவாக்கப்பட்ட விதம்
➡இடைவெளி காட்சி
➡நம்மை சிரிக்கவைத்த சில காமெடிகள்

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் நீளம்
➡மெல்ல நகரும் முதல் பாதி கதைக்களம்

Rating: (2.75 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“ரசிகர்களிடம் நடத்திய சர்வேயில் ‘பையா’ ரீ ரிலீஸுக்குத்தான் அதிக டிமாண்ட் இருந்தது” ; இயக்குநர் N.லிங்குசாமி
அடுத்த கட்டுரை‘சீயான் 62’ வில் கதையின் நாயகியாகும் துஷாரா விஜயன்!