காந்தாரா தமிழ் திரைப்பட விமர்சனம்

காந்தாரா கதை
ராஜா ஒருவர் வீடு , நிலம் , உணவு , இப்படி எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார், அந்த நிம்மதிக்காக பூசாரி ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறார் அதற்கு பூசாரி நீ தனிமையில் வெளியில் சென்று சுற்று அப்போது உனக்கு எது அந்த நிம்மதியை தருகிறதோ அதுதான் உனக்கான தீர்வு என்கிறார் பூசாரி , ராஜாவும் நிலப்பரப்பில் செல்கிறார் பல இடங்கள் சுற்றுகிறார் , பல பூசாரிகளை சந்தித்தது ஆலோசனை கேட்கிறார் , அப்போது ஒரு இடத்தில் ஒரு கல்லுக்கு பூஜை செய்து இருக்கும் அதனை பார்த்தவுடன் இவர் சற்று நிம்மதியாக உணர்கிறார், அது மலைவாழ் மக்களின் கடவுள் என்பதால் அவர்களிடம் இவர் உங்கள் கடவுளை எனக்கு கொடுத்துவிட்டால் நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருகிறேன் என்கிறார் அந்த ராஜா , ஆனால் ஊர் மக்கள் அதனை மறுக்கின்றனர், அப்போது அவர்களுள் ஒருவருக்கு சாமி வந்து இங்கு உள்ள மக்களுக்கு வாழ இடம் கொடுத்தால் நீ இதனை எடுத்துச்செல்லலாம் என்கிறார் சாமி வந்தவர் , பிறகு ராஜாவும் அதனை செய்துவிடுகிறார் ,பிறகு ராஜாவின் சந்ததியினர் மக்களிடம் இருந்து அந்த நிலத்தை பிடுங்க திட்டம் போடுகின்றனர் , இவர்கள் நினைத்தபடி அந்த நிலத்தை பிடுங்கினார்களா ? இல்லையா ? என்பதும் அதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை
இதனை இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் செட்டி மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
திரைக்கதை
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
தரமான தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை
எதுவும் இல்லை

Rating: (4/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைBlacksheep நிறுவனம் நவம்பர் 6 அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது
அடுத்த கட்டுரை‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி