கருணாகரன் நடித்த ‘குற்றச்சாட்டு’- எமோஷனல் ஃபேமிலி டிராமா த்ரில்லர் ரிலீஸுக்கு தயாராக உள்ளது!

எமோஷனல் ஃபேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள ‘ குற்றச்சாட்டு ‘ படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வரக்கூடிய நடிகர் கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் விமல் விஷ்ணு கூறும்போது, “கொச்சியில் பல தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’. அவர்களின் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு, குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் போது, அப்பாவி தந்தை தனது மகளுக்கு நீதி கேட்க முயற்சி செய்கிறார். படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது. இதுவரை படத்தைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் எமோஷனல் மற்றும் த்ரில்லர் தருணங்களின் கலவையாக இருக்கும். படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன” என்றார்.

சுரேஷ் நந்தன் இசையமைக்க, நிதின் சேகர் ஆர்.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் (எடிட்டர்), எஃபெக்ட்ஸ் & லாஜிக்ஸ் (விஎஃப்எக்ஸ்), ஐஜீன் (டிஐ), சிவா (கலரிஸ்ட்), சூப்பர் குட் ஸ்டுடியோஸ் (டப்பிங்), ஏஎஸ் லட்சுமி நாராயணன் (மிக்சிங் மற்றும் மாஸ்டரிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவினர்.

டிவைன் பிளாக்பஸ்டர் சார்பில் ராஜேஷ் மாதவன், சஜனி ராஜேஷ், தயன் ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி ஆகியவை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here