கோழிப்பண்ணை செல்லதுரை கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் செல்லத்துரையையும், அவனின் தங்கையையும் சில காரணங்களால் அவனின் அம்மா விட்டு செல்கிறார். செல்லத்துரையின் அப்பாவோ, அம்மா மேல் உள்ள கோவத்தில் பிள்ளைகள் இருவரையும் அப்பத்தா வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார். பிறகு அப்பத்தாவும் இறந்துபோகிறார்.
அப்பாவும், அம்மாவும் இல்லாத இவர்களை, பெரியப்பா யோகிபாபு பார்த்துக்கொள்கிறார். செல்லதுரை மிகவும் கஷ்டப்பட்டு தன் தங்கையை வளர்க்கிறார். செல்லத்துரையின் வாழ்க்கை இதற்கடுத்து என்னாயிற்று என்பதும் இவர்களின் அப்பா, அம்மாவை மீண்டும் சந்தித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சீனு ராமசாமி அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அறிமுக நாயகன் ஏகனின் சிறப்பான நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
➡படத்தை நம்முடன் இணைக்காத சில காட்சிகள்
ரேட்டிங்: (2 .75 / 5)
Also Read : ARM Tamil Movie Review