லால் சிங் சத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

லால் சிங் சத்தாவின் கதை
கதையின் நாயகன் லால் சிங் சத்தா (அமீர்கான் ) இரயில் பயணத்தின் போது அங்கு உள்ளவர்களிடம் அவரின் கதையை பற்றி சொல்கிரார் அதில் லால் சிங் சத்தாவிற்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க முடியாது மற்றும் சில விஷயங்கள் அவருக்கு தாமதமாக தான் புரியும் இதனால் அவனைவரும் இவரை அசிங்கப்படுத்துவார்கள் ஆனால் இவரின் அம்மா இவருக்கு தைரியத்தை கூறி வளர்க்கிறார் இவருக்கு பள்ளியிலிருந்தே தோழியாக இருக்கிறார் ரூபா (கரீனா), ரூபாவும் இருக்கு சில சமயங்களில் அறிவுரை கூறுகிரார், பிறகு இருவரும் சேர்ந்தே கல்லூரியில் படிக்கின்றனர் அடிக்கடி லால் ரூபாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்வாயா என கேட்பார் ஆனால் அதற்கு ரூபா பதில் சொல்லாமலே இருப்பார் கல்லுரி முடிந்ததும் லால் இராணுவத்திற்கு சென்று விடுவார் ரூபா நடிகையாகி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதனை நோக்கி நகர்கிறார், இராணுவத்தில் பாலு (நாக சைதன்யா) லால் சிங் சத்தாவிற்கு நண்பனாக கிடைக்கிறார், லால் சிங் சத்தாவிற்கு எப்பொழுதுமே ரூபாவின் நினைப்புதான் அந்த நினைப்போடு வருடங்கள் நகர்கின்றன கடைசியில் லால் ரூபாவை சந்தித்தாரா ? மற்றும் அவரை திருமணம் செய்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இந்த லால் சிங் சத்தாவின் கதை நிச்சயமாக நம் வாழ்க்கைக்கு சில புரிதல்களை கொடுக்கும் மற்றும் இந்த படம் 1994 -ல் அமெரிக்காவில் வெளியான Forrest Gump என்ற படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Read Also: Emoji Web Series R̥eview

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
படத்தில் கடுப்பானவை

படத்தின் நீளம்
மெல்ல நகரும் கதைக்களம்
இசை

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *