லியோ தமிழ் திரைப்பட விமர்சனம்

லியோ கதை

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற பகுதியில் பார்த்தி ( தளபதி விஜய் ) தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அங்கு அவர் ஒரு காஃபி ஷாப் வைத்துள்ளார். மிஷ்கின் தனது கூட்டத்துடன் அந்த காஃபி ஷாப்- கு செல்கின்றனர், அங்கு நடந்த சில விஷயங்களால் பார்த்தி அவர்கள் அனைவரையும் கொலை செய்கிறார். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திக்கிறார்.

அணைத்து பிரச்சனைகளும் தீர்ந்தது என நினைக்கும் சமயத்தில். செய்தித்தாளில் இவரின் புகைப்படத்தை பார்த்த சிலர் பார்த்தியை, லியோ என புரிந்துகொண்டு, அனைவரும் பார்த்தியையும் அவரின் குடும்பத்தையும் அழிக்க நினைக்கின்றனர். லியோவை தேடி வரும் அனைவரையும் சமாளித்து தன் குடும்பத்தையும், தன்னையும் பாதுகாத்து அணைத்து பிரச்னைகளையும் முடித்தரா? இல்லையா? என்பதும் லியோ யார்? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் A History of Violence என்ற திரைப்படத்தை தழுவி தனது பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡தளபதி விஜய்யின் சிறப்பான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡திரைக்கதை
➡அனிருத் பாடல் & பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை’டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் சல்மான் கான் & கத்ரீனா கைப் மகிழ்ச்சி
அடுத்த கட்டுரை‘டெவில்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகை எல்னாஸ் நோரூஸி, ‘ரோஸி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்