தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்

தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் அங்காரகன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

உதித் நாராயணன் மற்றும் ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி பாடகர்கள் பங்களிப்பை கொடுத்துள்ள இந்த படத்தின் இசை ஆல்பம் வரும் மார்ச் 29ஆம் தேதி ட்ரெண்ட் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

சத்யராஜின் கதாபாத்திரத்தை சுற்றிவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீபதி, சதீஷ் சரண் இயக்கத்தில், சைமன் கிங் இசையமைப்பில் அசுரன் புகழ் அம்மு அபிராமி மற்றும் கோமல் சர்மா கதாநாயகிகளாக நடித்துள்ள பெண்டுலம் என்கிற படத்திலும் மற்றும் சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையமைப்பில் உருவாகியுள்ள என் இனிய தனிமையே என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மலையாள நடிகை நியா மற்றும் மும்பையை சேர்ந்த மாடலான ரெய்னா காரத் இந்த படத்தின் கதாநாயகிகளாக தமிழ் திரைஉலகிற்கு அறிமுகம் ஆகின்றனர். மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நியா நடித்திருந்தார் என்பதும் மற்றும் தெலுங்கில் லாயர் விஸ்வநாத் என்கிற படத்தில் நகைச்சுவை நடிகர் அலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரோஷன், தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், KCP பிரபாத் , காயத்ரி D ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு பிரமிப்பூட்டும் திரைக்கதை எழுதி பாராட்டு பெற்ற கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோமோன் பிலிப் கூறும்போது, “இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருந்தாலும் அதேசமயம் பாடல்கள் இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளதுடன் வரும் சம்மரில் இந்த படம் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதியும் உறுதிப்படுத்தியுள்ளார். .

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, #VNRTrio திரைப்படம் பிரமாண்டமாகத் துவங்கியது !!
அடுத்த கட்டுரைடாப் கியர் இந்தியாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான்