மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாவீரன் கதை

கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர் . Housing Board-ல் பல பிரச்சனைகள் வருகிறது அதனை நாயகனின் அம்மா எதிர்த்து கேட்கிறார். ஆனால் நாயகன் சத்யா அம்மாவை சமாதானப்படுத்துகிறார் , அந்த பிரச்சனையிலிருந்து விலகி நிற்கிறார், காரணம் இவர் பயந்த சுபாவம் கொண்டவர்.

Read Also: Baba Black Sheep Movie Review

நாயகனின் தங்கைக்கு ஒரு பிரச்சனை வருகிறது , இவர் அதையும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார், இவருக்கு விபத்து ஏற்படுகிறது அப்போதோலிருந்து இவருக்கும் ஒரு குரல் கேட்க ஆரம்பிக்கிறது. அந்த குரல் கேட்க ஆரம்பித்த பிறகு சத்யா வாழ்வில் என்னவெல்லாம் நடந்தது என்பதும் , கோழையாக இருந்த இவர் வீரனாக மாறினாரா ? இல்லையா ? என்பதும் Housing Board -ல் உள்ள பிரச்சனை தீர்ந்ததா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் மடோன் அஷ்வின் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்
SK , மிஷ்கின் , சரிதா – அவர்களின் நடிப்பு
கதாபாத்திரத்திற்க்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
யோகிபாபுவின் காமெடி
பரத் சங்கரின் இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

மேலும் மெழுகேற்றப்படாத மற்றும் மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்

Rating : ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here