மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை மாகாபா கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவியில் உள்ள புகழ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாகாபாவின் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவில் மாகாபாவின் டீஜ் ஏஜ் மகள் அனிலியா புகைப்படமும் உள்ளது. மாகாபாவின் மகள் அனிலியா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























