ஜவானில் இடம் பெற்ற ‘ வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஷாருக்கான் நிகரற்ற ஆற்றலுடன் அதே பாடலை அட்லீ சொல்லிக்கொடுத்தபடி, ஷாருக்கான் தென்னிந்திய மொழி உச்சரிப்புடன் பாடலைப் பாடுவதைப் பாருங்கள்..!

‘வந்த எடம்..’ பாடலுக்கான திரைக்குப் பின்னால்.. காணொளி இப்போது வெளியாகி இருக்கிறது.

பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையே வெளிப்பட்ட அற்புதமான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தி, தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ‘வந்த எடம்..’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த காணொளி கேமரா லென்ஸ்க்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது. ஜவானின் இதயத்தில் ஒரு நெருக்கமான பார்வையை வழங்குகிறது. பாடல் தொகுப்பில் எதிரொலிக்கும் கடும் உழைப்பு, வியர்வை, தோழமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றையும் விவரிக்கிறது.

ஷாருக்கான் ஈடு இணையற்ற ஆற்றலுடன் அதே பாடலை பாடும் போது ஷாருக்கானிற்கு தென்னிந்திய மொழி உச்சரிப்புடன் பாடல் வரிகளுக்கேற்ப உதட்டை அசைக்க.. இயக்குநர் அட்லீ வழிகாட்டுகிறார். இயக்குநர் அட்லீ மற்றும் அவரது குழுவினர் ஷாருக்கானுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் பாடலுக்கான வரிகளைக் கற்றுக் கொடுப்பது… இயக்குநரே ஷாருக்கானுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நடன அசைவை பகிர்ந்து கொள்வது… என கவனிக்க வேண்டிய சில தனித்துவமான தருணங்கள்… இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் பாடலில் நடிகர்கள் மற்றும் குழுவினரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட வேடிக்கையான மற்றும் அன்பான தருணங்களை பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது. திரைக்குப் பின்னால் உள்ள இந்த காணொளி, ‘வந்த எடம்’ உருவாக்கும் செயல் மற்றும் உணர்வுகளை முன்னிறுத்துகிறது.‌

இந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் ஒலிக்கிறது. இந்தப் பாடல், மொழி எல்லைகளைக் கடந்து தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால்… அனைத்தையும் உள்ளடக்கிய இந்த விசயங்கள் மக்களின் இதயங்களை கவர்ந்து வருகிறது.
பி டி எஸ் வீடியோ – ரசிகர்களுக்கு பிரமிக்க வைக்கும் பாடலை உருவாக்க வழி வகுத்த விரிவான முன் தயாரிப்புகளின் ஒரு கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. இந்த கூட்டு முயற்சியானது, இரு உலகங்களிலும் சிறந்ததைக் கொண்டாடி உண்மையான பான் -இந்திய படமாக மாற்றுகிறது.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here