மயில்சாமி மகன் அன்பு நடிக்கும் புதிய படம் “எமன் கட்டளை”

இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது.இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள். இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு
எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான்.பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா?என்பதை நகைச்சுவையுடன் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக படமாக்கப்பட்டிருக்கின்றது.

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் கடந்த ஆண்டு வெளிவந்த குண்டான் சட்டி எனும் படத்தை தயாரித்த டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சந்திரிகா நடிக்க அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா போன்ற நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஒளிப்பதிவு –
ஏ.கார்த்திக் ராஜா

இசை -என்.எஸ்.கே
பாடல்கள் -சினேகன்

நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ,

மக்கள் தொடர்பு -வெங்கட்

கதை வசனம் -வி.சுப்பையன்

தயாரிப்பு –
டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன்

திரைக்கதை இயக்கம் – எஸ்.ராஜசேகர்

அனுபவமிக்க ஒளிப்பதிவாளரால் உருவாக்கப்பட்ட படக்காட்சிகளும் பாடல் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் பலம்.

பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!
அடுத்த கட்டுரைஆத்வி சேஷுவின் ஸ்பை த்ரில்லர் G2 இன் அடுத்த அத்தியாயத்தில் நடிகை வாமிகா இணைந்துள்ளார் !!