குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் டிரஸ்ட் என்ற இடத்தில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
“கேம் சேஞ்சர்” திரைப்படம் தான் அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக் நடத்தும் முதல் இந்தியத் திரைப்படமாகும். 22-12 – 2024 அன்று நடக்கும் இந்த முன் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ரசிகர்களுடன், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
டெக்சாஸ்- இல் நடக்கும் வெளியீட்டு நிகழ்வை மேலே👆 கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தி பார்த்து மகிழுங்கள்.
படத்திலிருந்து இதுவரை வெளியான ரா மச்சா மச்சா ரா என்ற பாடலுக்கு மக்கள் அனைவரும் ரீல்ஸ் செய்து அந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியான லைரானா என்ற பாடல் அழகான ஒரு காதல் பாடலாக இருக்கிறது, கேம் சேஞ்சரிலிருந்து வெளியான டீசர் நம்மால் கணிக்கமுடியாத கதைக்களமாக உள்ளது, சண்டைக்காட்சிகள் தரமானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. காட்சிகள் அனைத்தும் மிக பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உள்ளது. இவையெல்லம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
இந்த பிரமாண்ட படத்தினை தயாரிப்பாளர்கள் தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்கள்.
கதையின் நாயகனாக குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஞ்சலி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், தமனின் துள்ளல் இசையில் உருவாகியுள்ள இந்த கேம் சேஞ்சர்’ திரைப்படம் 10 – 01 -2025 ல் திரையரங்கில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.