மெய்யழகன் கதை
1996 ல் கதையின் நாயகன் அருள் அவனின் அப்பா, அம்மாவுடன் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி சென்னைக்கு சென்று அங்கு செட்டில் ஆகிவிடுகின்றனர். 2018 ல் அருளின் சொந்தகார தங்கைக்கு திருமணம் என்பதால் 22 வருடங்கள் கழித்து தஞ்சாவூருக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அருளும் கிளம்பி செல்கிறான்.
அருள் திருமணத்திற்கு சென்ற இடத்தில் , அருளை ஒருவன் பார்த்துக்கொள்கிறான். ஆனால்அவன் யார் என்பது அருளுக்கு தெரியவில்லை. அங்கு உள்ள சிலரால் அருள் அங்கிருந்து கிளம்ப நினைக்கிறான். ஆனால் பேருந்தை தவறவிட்டுவிடுகிறான். அருள் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் அந்த ஒருவனை அருள் யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பிரேம் குமார் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அரவிந்த் சாமி & கார்த்தி நடிப்பு
➡மற்ற அனைவரின்எதார்த்த நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡நம்மை சிரிக்கவைக்கும் எதார்த்த காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: (3.5 / 5)