மின்மினி கதை
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பாரி என்ற மாணவன் படித்துக்கொண்டிருக்கிறான். பாரி கால்பந்து விளையாட்டு வீரன், இவன் பல இடங்களில் விளையாடி பள்ளிக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கிறான். இதனால் பள்ளியில் உள்ள அனைவருக்குமே பாரியை பிடிக்கும்.
Read Also: Park Tamil Movie Review
சபரி என்ற சிறுவன் பாரி படிக்கும் பள்ளியில் சேருகிறான். பாரி அடிக்கடி சபரியை வம்பிழுக்கிறான், இதனால் சபரி, பாரியிடம் இருந்து விலகுகிறான். இவர்கள் இப்படியே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கின்றனர். கடைசியில் இந்த மோதல் நட்பாக மாறியதா? இல்லையா? என்பதும் இவர்கள் இருவருக்கு இடையில் கதையின் நாயகி பிரவீனா எப்படி வருகிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த மின்மினி திரைப்படம் 2015 லஇல் தொடங்கி 2022 இல் கிட்டத்தட்ட 8 வருடங்கள் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த கதையினை இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡முக்கிய 3 கதாபாத்திரங்களின் நடிப்பு
➡படத்திற்காக எடுத்த புதிய முயற்சி
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
ரேட்டிங்: (3 / 5)