நாடு தமிழ் திரைப்பட விமர்சனம்

நாடு கதை

கொள்ளிமலையில் இருக்கக்கூடிய, கதையின் நாயகன் மாரியின் தங்கை தற்கொலை முயற்சி செய்திருப்பார். அவரை காப்பாற்றும் முயற்சியில் மாரி அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். மருத்துவமனையில் யாரும் இல்லாததால் மருத்துவமனை பூட்டி கிடக்கிறது. பிறகு நகரத்தில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். ஆனால் மாரியின் தங்கை இறந்துவிடுகிறார்.

Read Also: Parking Movie Review

இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தீர்த்து வைக்க கலெக்டர் வருகிறார். அப்போது கிராம மக்கள் தங்களுக்கு ஒரு டாக்டர் வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர். உங்கள் கிராமத்திற்கு வந்து பணியாற்ற எந்த டாக்டரும் விரும்பவில்லை, அப்படி வந்தாலும் விரைவில் அங்கிருந்து சென்றுவிடுவதாக சொல்கிறர் கலெக்டர். இருப்பினும் தான் ஒரு மருத்துவரை அனுப்பி வைக்கிறேன் அவரை உங்கள் ஊரை விட்டு செல்லாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் கலெக்டர்.

அதன் பிறகு அந்த ஊருக்கு மஹிமா டாக்டராக வருகிறர், அவருக்கு அந்த ஊரில் பணியாற்ற விருப்பமில்லை அதனால் ஒரு வாரத்தில் செல்லும் திட்டத்தோடு வந்திருப்பார். அதனை அறிந்த ஊர் மக்கள் டாக்டரை எப்படி பார்த்துக்கொள்கின்றனர் என்பதும். கடைசியில் டாக்டர் அந்த ஊரை விட்டு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் M. சரவணன் அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡️காலகாலமாக பார்த்த கதையினை வித்தியாசமாக கையாண்ட விதம்
➡️மாரியாக வாழ்ந்த தர்ஷனின் நடிப்பு
➡️மற்ற அனைவரின் எதார்த்த நடிப்பு
➡️வசனங்கள்
➡️படத்தின் ஆரம்பம், இடைவேளை, கிளைமேக்ஸ் காட்சிகள்
➡️சத்யாவின் பின்னணி இசை
➡️ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡️நம்பகத்தன்மையற்ற ஒருசில காட்சிகள்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *