சூரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சூரகன் கதை

கதையின் நாயகன் கார்த்திகேயன் காவல் அதிகாரியாக இருக்கிறார், இவருக்கு நடந்த ஒரு விபத்தில் பார்வையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலையில் இவர் எதிரிகளை சுடும்போது எதிர்பாராமல் ஒரு பெண்ணை சுட்டு விடுகிறார், இதனால் இவரின் வேலை போகிறது. ஒருநாள் இவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருபெண் அடிபட்டு கிடப்பார், அவரை மருத்துவமனையில் சேர்பதற்குள் அவர் இறந்துவிடுகிறார்.

Read Also: Naadu Movie Review

நிழல்கள் ரவியின் பேத்தியும் மர்மமான முறையில் இறந்திருப்பார், இவர் கார்திகேயனிடம் தன் பேத்தி இறப்பிறகு யார் காரணம் என தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க சொல்கிறார். இந்த கேஸை பற்றி விசாரிக்கும் சமயத்தில் மற்றொரு பெண் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த 3 பெண்களின் இறப்பிற்கு என்ன தொடர்பு என்பதையும், இந்த கொலைக்கெல்லாம் யார் காரணம் என்பதை கதையின் நாயகன் கார்த்திகேயன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் சதிஷ் கீதா குமார் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡️அனைவரின் நடிப்பு
➡️ஒளிப்பதிவு
➡️பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡️சுற்றிவளைக்கும் திரைக்கதை
➡️காலகாலமாக கண்ட கதைக்களம்

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *