பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் இளைய மகனுமான பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தயாராகி வருகிறது. நாகேஷின் நினைவு நாளான இன்று (31.01.2024) அதற்கான முதற்கட்ட வேலைகளாக இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜின் வாழ்த்துகளுடன் துவங்கியது
பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகிறது.
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் ஆகிய
படங்களில் நடித்த பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க மேலும் தீபா சங்கர்,லொள்ளுசபா ஜீவா
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , ஈரோடு எம்.ஜி.ஆர்.ஆகியோர் நடிக்கின்றனர்
“டூ ” எனும் படத்தை இயக்கியவரான ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்
ஆரஞ் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் தயாரிக்கிறார்
ஒளிப்பதிவு-
நிரன் சந்தர்
இசை- ஷாஜகான்
பாடல்கள் – செந்தமிழ்
மக்கள் தொடர்பு – வெங்கட்





























