நண்பன் ஒருவன் வந்த பிறகு தமிழ் திரைப்பட விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு கதை

கதையின் நாயகன் ஆனந்த், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துகொண்டிருக்கிறார். அவரின் அருகில் வெங்கட் பிரபு அமர்ந்திருக்கிறார். ஆனந்த், வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனந்த், அவரின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு (NOVP) என்ற நிகழ்ச்சி அமைப்பாளர் (Event organiser) தொழிலை தொடங்குகிறார்கள்.

Read Also: Mazhai Pidikatha Manithan Tamil Movie Review

இவர்கள் அனைவரும் நினைத்தபடி தொழில் பெரிதாக செல்லவில்லை நண்பர்கள் அனைவரும் ஆனந்தை குறை சொல்கிறார்கள், இதனால் இவர்களுக்குள் பிரச்சனையும் நடக்கிறது. ஆனந்தின் வீட்டில் பணரீதியாகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆனந்த் சிங்கப்பூர் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்ததும் ஆனந்த் நினைத்ததை செய்துமுடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை ஆனந்த் அவர்கள் நடித்து, இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡AR. ரஹ்மானின் இசையை பயன்படுத்தியது
➡ஆனந்த்-இன் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡ஒருசில படங்களின் சாயல்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: (2.75 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமழை பிடிக்காத மனிதன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைமெய்யழகன் அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம்