நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஓதெலா இணையும் திரைப்படத்திற்கு “தி பாரடைஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனித்துவமான பாத்திரங்களைத் தருவதில் வல்லவர், அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தில் மீண்டும் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். நானியை முரட்டுத்தனமான, கிராமத்துக் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய தசராவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, #NaniOdela2 படத்தில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா மற்றும் SLV சினிமாஸின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி ஆகியோருடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தசராவின் போது வெளியிடப்பட்டது, இன்று, படக்குழு இப்படத்திற்கு “தி பாரடைஸ்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த தலைப்பு, வெளிப்பார்வைக்கு அமைதியானதாக இருந்தாலும், படத்தின் போஸ்டர் மிகத் தீவிரமான மற்றும் அதிரடி கதைக்களம் காத்திரப்பதஇ உறுதி செய்கிறது. துப்பாக்கிகள், இரத்தக்களரி மற்றும் சார்மினார் சின்ன சுவரொட்டி, வன்முறை மற்றும் அதிகாரம் முக்கிய பாத்திரங்களை வகிக்கும் ஒரு சக்தி நிறைந்த கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நானியின் கதாபாத்திரம் மிகவும் தீவிரமானதாகவும் இதுவரையில் பார்த்திராததாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை உறுதியளிக்கிறது.

இந்த பான்-இந்தியா திரைப்படத்தில், ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நானி மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைகிறது. ஸ்ரீகாந்த் ஓதெலாவின் அழுத்தமான திரைக்கதையில், தி பாரடைஸ் நானியை இதுவரை கண்டிராத அவதாரத்தில் வழங்கவுள்ளது. நானி தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு, மிக தீவிரமாக இப்படத்திற்காகத் தயாராகி வருகிறார்.

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இந்த திரைப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கின்றார். நானியின் திரைப்படங்களில் மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர்கள் – நானி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓதெலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருக்குரி
பேனர் : SLV சினிமாஸ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு, 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!
அடுத்த கட்டுரை’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!