சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் புதிய தெலுங்கு படங்களின் லைன்- அப்

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை நெட்ஃபிலிக்ஸ் தளம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இந்த வருடம் என்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியா தளத்தின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் இனி வர இருக்கும் படங்களின் வரிசை குறித்து பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக கதைகள் வரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டக்கூடியவர்கள். அதனால், அவர்கள் விரும்புவதைக் கொடுப்பதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ’ஆர்.ஆர்.ஆர்.’, ‘ஷ்யாம் ஷிங்கா ராய்’, ‘அண்டே சுந்தரன்கி’ உள்ளிட்டப் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு வரவேற்பு இருந்த நிலையில், தற்போது புதிய தெலுங்கு படங்களின் வரிசையை பார்வையாளர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம்.

மொத்தப் படங்களின் பட்டியல்

1. டைட்டில்/புராஜெக்ட்: போலா சங்கர்,
தயாரிப்பு நிறுவனம்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

2. டைட்டில்/புராஜெக்ட்: அமிகோஸ்,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

3. டைட்டில்/புராஜெக்ட்: மீட்டர்,
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் & க்ளாப் எண்டர்டெயின்மெண்ட்,
மொழி: தெலுங்கு

4. டைட்டில்/புராஜெக்ட்: படி (Buddy),
தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

5. டைட்டில்/புராஜெக்ட்: புட்ட பொம்மா,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

6. டைட்டில்/புராஜெக்ட்: பிவிடி 04,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

7. டைட்டில்/புராஜெக்ட்: தில்லு ஸ்கொயர்,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

8. டைட்டில்/புராஜெக்ட்: தசரா மற்றும் புரொடக்‌ஷன் நம்பர் 6,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்- SLVC,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

9. டைட்டில்/புராஜெக்ட்: தமாகா,
தயாரிப்பு நிறுவனம்: பீப்பிஸ் மீடியா ஃபேக்டரி/ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்,
மொழி: தெலுங்கு

10. டைட்டில்/புராஜெக்ட்: கார்த்திகேயா 8 மற்றும் புரொடக்‌ஷன் நம்பர் 14,
தயாரிப்பு நிறுவனம்: யூவி கிரியேஷன்ஸ்,
மொழி: தெலுங்கு

11. டைட்டில்/புராஜெக்ட்: 18 பேஜஸ்,
தயாரிப்பு நிறுவனம்: GA2 பிக்சர்ஸ்/ அல்லு அரவிந்த் வழங்குகிறார்/ எழுத்து- சுகுமார்,
மொழி: தெலுங்கு

12. டைட்டில்/புராஜெக்ட்: VT 12,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா llp,
மொழி: தெலுங்கு

13. டைட்டில்/புராஜெக்ட்: விருபக்ஷா,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா llp/ எழுத்து- சுகுமார்,
மொழி: தெலுங்கு

14. டைட்டில்/புராஜெக்ட்: SSMB 28,
தயாரிப்பு நிறுவனம்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ்,
மொழி: தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்

Read Also: Tamil Movie List

நெட்ஃபிலிக்ஸ் குறித்து:

நெட்ஃபிலிக்ஸ் , உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் எண்டர்டெயின்மெண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 190 நாடுகளில் 223 மில்லியன் மெம்பர்ஷிப்புடன் உலகம் முழுவதும் பார்வையாளர்கள் டிவி சீரிஸ், டாக்குமெண்ட்ரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் விளையாட்டுகளை வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு மொழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். நெட்ஃபிலிக்ஸ் உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், நிறுத்தலாம், தொடர்ந்து பார்க்கலாம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றதுபோல திட்டங்களையும் மாற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *