நிறம் மாறும் உலகில் கதை
கதையின் ஆரம்பத்தில் அபி என்கிற பெண் அம்மாவுடன் சண்டைபோட்டுவிட்டு சென்னையிலிருந்து , ஹைதராபாத்திற்கு ரயிலில் அவரின் தோழியின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அங்கு வந்த TT அபியின் செயல்களை கவனிக்கிறார். அபியின் பிரச்சனை என்னவென்று அபியிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.
Read Also: Gentlewoman Tamil Movie Review
அபியின் மொத்த கதையையும் கேட்டு தெரிந்துகொண்ட TT, உனக்கு அம்மாவை பிடிக்கவில்லை ஆனால் அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய 4 பேரின் கதையை உனக்கு சொல்கிறேன், பிறகு உன்முடிவு என சொல்கிறார். இதில் அம்மாவின் பாசத்திற்காக மும்பையில் எப்படி தாதா ஆனான் என்றும். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல், காலமெல்லாம் கலங்கும் ஒருவனின் கதையும். அம்மாவுக்காக கொலை செய்தவனின் கதையையும். அம்மாவுக்காக காதலை உதறித்தள்ளியவனின் கதையையும் சொல்கிறார், இதற்கடுத்து அபி என்ன முடிவெடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரிட்டோ JB இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதாபாத்திரங்களின் தேர்வு
➡பாரதிராஜா, நட்டி, ரியோ, சாண்டி ஆகியோரின் சிறப்பான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங் : ( 2.75 / 5 )