ஒன் வே தமிழ் திரைப்பட விமர்சனம்

அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன்.

இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர் கண் வைக்கிறார். கடனை கொடுக்க வில்லை என்றால், பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும், என்று அடாவடி செய்யும் சார்லஸ் வினோத்தின் கடனை அடைப்பதற்காக நாயகன் பிரபஞ்சன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முடிவு செய்கிறார். அதற்காக தனது அப்பாவின் நினைவாக வைத்திருந்த தாலியை அம்மா கோவை சரளா விற்று அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டிய நாயகன் பிரபஞ்சன், எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால் வெளிநாட்டுக்கு போக முடியாமல் மும்பையில் சிக்கிக்கொள்ள, அதே சமயம் கையில் வைத்திருந்த பணத்தை இழந்துவிட்டதால் சொந்த ஊருக்கும் போக முடியாமல் தவிக்கிறார்

கடைசியில் கதையின் நாயகன் குடும்ப கடனை அடைக்க என்ன செய்கிறார் என்பதும் இவர் ஊருக்கு திரும்பி சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைநித்தம் ஒரு வானம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைடிக்கெட் விலையில் தள்ளுபடி ” பேய காணோம் ” படக்குழுவினர் அதிரடி