மீண்டும் தமிழில்  இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர்  இசையமைப்பாளர் MMகீரவாணி!

தென்னிந்திய மொழிகளில்  முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர்  ‘ஜென்டில்மேன் ‘ K.T.குஞ்சுமோன்.  சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின்  ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் பிரமாண்ட திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

S.S.ராஜ்மௌலியின் #RRR படத்தின் ‘நாட்டு நாட்டு.. ‘ பாடலுக்காக ‘பெஸ்ட் ஒரிஜினல் சாங்’ ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் #M.M.கீரவாணி, “ஜென்டில் மேன்-2” படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் டைரக்டர் A.கோகுல் கிருஷ்ணா ஐதராபாத்திற்கு சென்று முழு கதையையும் கீரவாணிக்கு நேற்று சொல்லி முடித்தார். கதை பிரமாண்டமாக இருக்கிறது.. அடுத்த மாதமே கம்போசிங் ஆரம்பித்து விடலாம் என்று ஜென்டில் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனிடன் கீரவாணி சொன்னார். இதை பிரமாண்டமாக தயாரிக்க போகிறேன் என்று கீரவாணியிடம் குஞ்சுமோன் சொல்ல,
சூப்பர்.. வாழ்த்துக்கள் சார் என்றார் கீரவாணி.
அதற்கான வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறார், K.T.குஞ்சுமோன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஇசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு
அடுத்த கட்டுரைசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023