‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன்…

Read More

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி…

Read More

நடிகர் ரஹ்மானின் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்கள்

நடிகர் ரஹ்மான், பல மொழி பான்-இந்திய நட்சத்திரம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, நடிகர் தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் மற்றும் விதிவிலக்கான அற்புதமான நடிப்பை வழங்குவதில் தனது இணையற்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டார். இன்று (23-05-2023) தனது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடுகிறார். தற்போது, தமிழில் ரவிச்சந்திரா இயக்கிய ‘அஞ்சாமை’, கார்த்திக் நரேன் இயக்கத்தில்…

Read More

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்‌ஷ்மி பேசியதாவது, “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில்…

Read More

கஸ்டடி தமிழ் திரைப்பட விமர்சனம்

கஸ்டடி கதை மிகவும் பொறுப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரியாக இருக்கிறார் கதையின் நாயகன் சிவா ( நாக சைதன்யா ), தனது குடும்பம் , காதலி , வேலை இவையே தனது உலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சிவா . எதிர்பாராத விதமாக ராஜு ( அரவிந்த் சாமி ) என்பவரை கைது செய்துவிடுகிறார், ராஜு மிகப்பெரிய கேங்ஸ்டர் என்பது பிறகுதான் தெரிகிறது. Read Also: Farhana Movie Review பிறகு ராஜூவை சிவா கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அவரை கோர்ட்டில்…

Read More

‘ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த கவுதம் வாசுதேவ் மேனன்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ், ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்திருந்த நிலையில் தற்போது ‘ஹிட்லிஸ்ட்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான…

Read More

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில்…

Read More

‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது, “‘கஸ்டடி’ என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல்…

Read More

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர்…

Read More

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி…

Read More