’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்….

Read More

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை…

Read More

தீராக் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

தீராக் காதல் கதை கதையின் நாயகன் கெளதம் அலுவலக வேலையின் காரணமாக மங்களூருக்கு இரயிலில் சென்றுகொண்டிருக்கிறார், அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் முன்னாள் காதலியான அரண்யாவை சந்திக்கிறார். அப்போது இருவருக்கும் மீண்டும் காதல் ஏற்படுகிறது. Read Also: 2018 Movie Review கௌதமிற்கு அன்பான மனைவியும் , அழகான குழந்தையும் இருக்கின்றனர் , ஆதலால் கெளதம் அரண்யாவிடமிருந்து விலகுகிறார் , ஆனால் அரண்யா எப்படியாவது கௌதமை அடைய நினைக்கிறார் , கடைசியில் கெளதம் , அவரின் அன்பான குடும்பத்துடன்…

Read More

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி…

Read More

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் ‘உசுராங்கூட்டில்..’ என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி….

Read More

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக…

Read More

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில்…

Read More

‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர் ஜியா, இசையமைப்பாளர் ஜேட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரியர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அஜ்மல் பேசும்போது, ‘குறும்படங்கள்தான் இப்போதெல்லாம் பெரிய…

Read More

டைனோசர்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி,  முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.  டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசியதாவது.. எங்களுக்காக எங்களை…

Read More

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர்…

Read More