பாராசூட் கதை
சண்முகம் சிலிண்டர் போடும் வேலையை செய்கிறார், இவருக்கு வருண் & ருத்ரா என இரண்டு குழந்தைகள் இருக்கிறர்கள். இவர்களை சண்முகம் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறார், ஆனால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கி கொடுத்துவிடுவார்.
Read Also: Parachute Tamil Web Series Review
ருத்ராவின் பிறந்தநாளுக்காக சாக்லேட் வாங்க, வருண் ருத்ராவை கூட்டிக்கொண்டு அப்பாவின் வண்டியை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக வண்டி காணாமல் போகிறது. பிறகு வண்டியை தேட ஆரம்பிக்கிறார்கள், மற்றொருபக்கம் குழந்தைகளை தேடி பெற்றோர்களும், காவல் அதிகாரி கிருபாவும் செல்கிறார்கள், இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே மீதி கதை…
இந்த கதையினை எழுத்தாளர் ஸ்ரீதர் எழுத, இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார்.
5 எபிசோடுகளை கொண்ட இந்த பாராசூட் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
சிறப்பானவை
➡குழந்தைகள் நடிப்பு
➡மற்றவர்களின் நடிப்பு
➡வசனங்கள்
➡பின்னணி இசை
➡மனதை உருக்கும் கடைசி எபிசோட்
ரேட்டிங்: ( 3.75 / 5 )