விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது.

இதற்கிடையே, ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஆனால், இது குறித்து பிரபாஸ் தரப்பில் இருந்தோ, விஷ்ணு மஞ்சு தரப்பில் இருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த இந்த தகவல் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் பிரபாஸ் நடிப்பது உண்மை தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான வேடம் ஒன்றி பிரபாஸ் நடிப்பதாக தெரிவித்துள்ள விஷ்ணு மஞ்சு, அவரது கதாபாத்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைZEE5 தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த “டிடி ரிட்டர்ன்ஸ்” !
அடுத்த கட்டுரைமெகா157 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இனிதே துவங்கியது!!