அழகி பாதித்தது போல் இன்னும் எந்த கதையும் என்னை பாதிக்க வில்லை என்றார், தயாரிப்பாளர் உதயகுமார்

2002 பொங்கல் அன்று பல பெரிய படங்களோடு சுமார் 8படங்களுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் தங்கர் பச்சானின் அழகி. மக்கள் மனதை வருடி கொள்ளை கொண்ட படம்.

1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தது.
ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து வாழ கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் அழகி கதை இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறது.

அழகி வெளியாகி 20ம் ஆண்டில், தனது முதல் தயாரிப்பே பெரும் வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சானை, கரூரில் வசிக்கும் தயாரிப்பாளர் நேற்று சென்னை வந்து சந்தித்து விட்டு சென்றார்.
அழகி பாதித்தது போல் இன்னும் எந்த கதையும் என்னை பாதிக்க வில்லை என்றார், தயாரிப்பாளர் உதயகுமார் .

‘அழகி’யை இயக்கியதற்காக என்னை பாராட்டுபவர்கள் முதலில் அதன் தயாரிப்பாளர் திரு உதயகுமார் அவர்களைத் தான் பாராட்ட வேண்டும்!
நெடு நாட்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பில் குடும்ப நலன் தமிழ்த்திரையுலக சிக்கல்கள் குறித்தும் உரையாடினோம். சிறந்த மனிதரை நண்பராகப் பெற்றது என் கொடுப்பினை!#அழகி!!
என்றார் இயக்குனர் தங்கர் பச்சான்.

இருவருமே அழகி இரண்டாம் பாகம் பற்றி பேசிகொள்ளவில்லை.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து நடிகை ஆத்மிகா!
அடுத்த கட்டுரைஅருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது